தமிழக முழுவதும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை சென்னையில் தொடங்கி வைத்ததோடு, காணொளி மூலமாக மற்ற மாவட்டங்களிலும் தொடங்கி வைத்தார். அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி உட்பட்ட மார்த்தாண்டம் மார்க்கெட்டின் எதிர்காலத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டது. மருந்தகத்தை குழித்துறை நகர் மன்ற தலைவர் பொன். ஆசை தம்பி திறந்து வைத்தார் . அவருடன் கவுன்சிலர்கள் பிஜு, சர்தார்ஷா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்த மருந்தகத்தில் அலோபதி, சித்தா, ஆயுர்வேதா ,யுனானி உட்பட்ட உயிர் காக்கும் மருந்துகள் 20% முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.