பூதப்பாண்டி காவல் நிலையம் முன்பு இரவில் பெண் திடீர் தர்ணா

கன்னியாகுமரி;

Update: 2025-02-25 16:22 GMT
குமரி மாவட்டம்  பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவர் இறச்ச குளம் பகுதியில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவர் நாகர்கோவில் அருகே உள்ள நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ஒரு சொகுசு கார் வாங்கியுள்ளதாகவும், அந்த காரினுடைய கடனில் மூன்று மாத இ.எம்.ஐ. பாக்கி உள்ளதாகவும் தெரிகிறது.  அதனால் நிதி நிறுவனத்தினர் அந்த வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.        இது  குறித்து ராணி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் 19-ம் தேதி சொகுசு காரை பறிமுதல் செய்துள்ளதாகவும், காரை திரும்ப பெற்று தருமாறும் மனு கொடுத்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த புகாரின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே உரிய நவடிக்கை எடுக்க  கேட்டு ராணி இன்று இரவு காவல் நிலையம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Similar News