திருச்சி:வாலிபரை கட்டையால் தாக்கிய ரவுடி கைது
வாலிபரை மரக்கட்டை யால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் நடவடிக்கை;
திருச்சி விமான நிலையம் ஸ்டார் நகரை சேர்ந்தவர் சதாம் உசேன் ( 30). சம்பவத்தன்று இவருக்கும் அதே பகுதியில் காமராஜர் நகரை சேர்ந்த ரவுடி அபு என்கிற இப்ராம்ஷா (29) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபு என்கிற இப் ராம்ஷா, தகாத வார்த்தைகளால் சதாம் உசேனை திட்டி மரக்கட்டை யால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அபு என்கிற இப்ராம்ஷாவை கைது செய்தனர்.