சிறுவனை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதித்த தாயார் மீது வழக்கு
ஓட்டுநர் உரிமம் இன்றி ஸ்கூட்டர் ஓட்டி வந்ததால் போலீசார் நடவடிக்கை;
திருச்சி ஸ்ரீரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 17 வயது சிறுவன் ஸ்கூட்டர் ஓட்டி வருவதை பார்த்தனர். உடனடியாக அந்த சிறுவனை பிடித்து விசாரித்த போலீசார், அந்த சிறுவனிடம் ஓட்டு னர் உரிமம் இல்லாததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து சிறுவனை வண்டி ஓட்ட அனுமதித்த அவனது தாயார் திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த ரேவதி (48) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.