கடன் தொல்லை காரணமாக அரசு ஊழியர் மாயம்

வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததால் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்;

Update: 2025-02-26 00:52 GMT
திருச்சி தென்னூர் ஆழ்வார்த்தோப்பை சேர்ந்தவர் நாசர் முகமது (49). இவர் திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நாசர் முகமது அதிகளவில் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அவரால் கடனை திருப்பி தர முடியவில்லை. இத னைத்தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் நாசர் முகமதுவிடம் கடனை திருப்பி கேட்டு உள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த நாசர் முகமது நேற்று வெளியே சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகு றித்து மொய்தீன் பைரோஸ் கொடுத்த புகாரின்பேரில், தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன நாசர் முகமதுவை தேடி வருகின்றனர்.

Similar News