தீ விபத்து

ஈரோடு அருகே இன்று காலை சாமி கும்பிட ஏற்றிய தீபத்தால் ஏற்பட்ட தீ விபத்து பீரோ - ரூ.5 ஆயிரம் பணம் எறிந்து நாசம்;

Update: 2025-02-26 03:01 GMT
ஈரோடு பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடை பகுதியில் ரவி-சித்ரா தம்பதியினர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.மாற்றுத்திறனாளியான ரவி இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் பணி செய்து வருகிறார்‌.சித்ரா கூலி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல இருவரும் வேலைக்கு செல்லும்போது தீபம் ஏற்றி சாமியை வழிபட்டு செய்துள்ளனர்.அப்போது எதிர்பாராத விதத்தில் தீ பரவி அறை முழுவதும் பற்றி எரிந்துள்ளது. இதனால் அறையில் இருந்த பீரோ மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் துணிகள் அனைத்தும் தீயில் கருகியது.தீ பற்றியதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர்‌.மேலும் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை அகற்றி பெரும் விபத்தை தவிர்த்தனர்‌.

Similar News