தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அசைவ விருந்து

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அசைவ விருந்து;

Update: 2025-02-26 07:22 GMT
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமை தாங்கினார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், தகவல் தொழில்நுட்ப அணி கோகுல், ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம், சொக்கப்பன், பிரேமா வாட்டர் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உத்தமராஜ், ஜெயக்குமார், புளியம்பட்டி சின்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News