ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.;
அரியலூர், பிப் 26- ஜெயங்கொண்டத்தில் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜா தற்போது பணி மாறுதல் பெற்று திருச்சி மாவட்டம் நாவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார். தற்போது அரியலூர் குற்ற பதிவேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜேந்திரன் பணி மாறுதல் பெற்று ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து.ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார்கள் உள்ளிட்டோர் சென்று ஜெயங்கொண்டம் புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இதற்கு முன்பு தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.