புளியங்குடியில் முதல்வர் மருந்தகம் நகர்மன்றத் தலைவி திறந்து வைத்தார்
முதல்வர் மருந்தகம் நகர்மன்றத் தலைவி திறந்து வைத்தார்;
குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் விதமாக முதல்வர் மருந்தகம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுமார் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புளியங்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை, புளியங்குடி நகர்மன்ற தலைவி விஜய சௌவுந்திரபாண்டி திறந்து வைத்தார். இதில் பத்திரம் சாகுல் ஹமீது, ராஜ் குமார், சௌராஜகாந்த், தலைமைக் கழகப் பேச்சாளர் சுப்பு, மீனாட்சி சுந்தரம், முத்துச்செல்வம், ஜெகநாத பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.