பல்லடம் அருகே தனியார் பஞ்சு ஆலையில் பயங்கர தீ விபத்து.
பல்லடம் அருகே தனியார் பஞ்சு ஆலையில் பயங்கர தீ விபத்து.இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமாக பஞ்சு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல ஆலையில் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கரும்புகை வெளியேறியது மேலும் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனையடுத்து அங்கு வேலை செய்து வந்த நபர்கள் இதுகுறித்து ஆலையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கவே அவர் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.மேலும் சம்பவ இடத்திற்கு பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு உட்பட்ட இரண்டு தீயணைப்பு வாகனத்தில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால் தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்தில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.