மினி பேருந்து வழித்தடம் குறித்து பொதுமக்களை சந்தித்த கலெக்டர்
கன்னியாகுமரி;
குமரி மாவட்டம் வட்டார போக்குவரத்து துறை சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள மினிபேருந்து விரிவான திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இன்று (26.02.2025) விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட ஊற்றுக்குழி மற்றும் அம்பலநடைதிருப்பு பொதுமக்களை நேரில் சந்தித்து கருத்து கேட்டு தெரிவிக்கையில்- பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் மினிபேருந்துககள் இயக்கப்படவுள்ளது. இதன் வாயிலாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியப்பணிகளுக்கு சென்று வரவும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் எந்தவித சிரமமின்றி படிக்கவும் முடியும். இதற்காக 10 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. என கூறினார். நடைபெற்ற ஆய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, வட்டார போக்குவரத்து அலுவலர், துறை அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.