குமரி புத்தகத் கண்காட்சியில்  வாசிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

கலெக்டர் தகவல்;

Update: 2025-02-26 12:55 GMT
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்  இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா கண்காட்சி  நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவங்கியது.    இன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் கலைப்போட்டிகள் மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் ரூ.1000க்கு மேல் புத்தகம் வாங்கும் வாசகர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, புத்தக கண்காட்சியின் நிறைவு நாளில் 01.03.2025 (சனிக்கிழமை) அன்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கபடவுள்ளனர்.        அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் இளைஞர்கள், பள்ளி கல்லூரி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் அதிகளவில் புத்தகங்களை வாங்கி வாசிப்புத்திறனை அதிகரித்து கொள்வதோடு, 6வது மாபெரும் புத்தகக்கண்காட்சியினை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். என கூறினார்.

Similar News