சங்கரன்கோவிலில் தர்பூசணி பழங்களை வெட்டி அழித்து உணவு பாதுகாப்புத் துறை
தர்பூசணி பழங்களை வெட்டி அழித்து உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் சாலையோர மாற்றுத்திறனாளி வியாபாரி மாரியப்பன் என்பவர் தர்பூசணி பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் விற்பனை செய்யும் பழங்கள் நிறம் மாறுவதற்காகவும், பழுக்க வைப்பதாகவும் ஊசி மூலம் செயற்கையாக மருந்துகளை ஏற்றுவதாக எழுந்த புகாரின் பெயரில் கடைக்கு நேரடியாக வந்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரி முகமது ஹக்கீம் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்ததில் ஊசி மூலம் மருந்து ஏற்றியது உறுதி செய்யப்பட்டதும் அதனை பினாயில் ஊற்றி அழித்து அபராதம் விதித்தனர். பின்னர் அந்த பழங்களானது நகராட்சி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டது.