வள்ளலார் கல்வி நிலையத்தில் இலவச கண், பல் மருத்துவ முகாம், விழிப்புணர்வு

வள்ளலார் கல்வி நிலையத்தில் இலவச கண், பல் மருத்துவ முகாம், விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது.;

Update: 2025-02-26 13:36 GMT
அரியலூர், பிப். 26- அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில், இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம் விழிப்புணர்வு புதன்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு அக்கல்வி நிலையச் செயலர் புகழேந்தி தலைமை வகித்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, ஆய்வாளர் மணிகண்டன் கலந்து கொண்டு, தினமும் சில அத்தியாவசிய கண் பராமரிப்பு பழக்கங்களை கடைப்பிடித்து கண்களை கவனித்து வந்தால் கண் பிரச்னைகளை எளிதில் தவிர்க்கலாம். ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றார்.புதுச்சேரி வேல்மொபைல் பால் மருத்துவ நிபுணர் மலர்கொடி,அடிக்கடி பல் பரிசோதனைகள் அவசியம். பல் வலி அல்லது பல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் பல் மருத்துவரை அணுகவும். பல் ஆரோக்கியம் முக்கியமானது. பற்கள் மற்றும் ஈறுகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. பல் வலிகளை தடுக்கிறது என்றார்.இதைத் தொடர்ந்து மேற்கண்ட கண் மருத்துவனை குழுவினர் செல்மென் பாரிஸ், அலெக்ஸ், ஆலோசகர்கள் முகேஷ், இஸ்மாயில் ஆகியோரும், பல் மருத்துவமனையில் வந்திருந்த மருத்துவர்கள் கீர்த்தனா, சீதாகுமார், மோனிகா ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினரும், ஆதரவற்ற மாணவ,மாணவிகளுக்கு இலவசமாக கண் மற்றும் பல் பரிசோதனை, சிகிச்சை மேற்கொண்டனர்.முடிவில் தலைமை ஆசிரியர் சௌந்தராஜன் நன்றி கூறினார்.

Similar News