குமரி : வெடிகுண்டு வீசியவர் விமான நிலையத்தில்  கைது 

நாகர்கோவில்;

Update: 2025-02-27 02:57 GMT
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமங்கூடலை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (57). தொழிலதிபர். இவரது வீட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பைக்கில் வந்த இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். இதில் வீட்டு வளாகத்தில் நின்ற கார் தீ பிடித்து எரிந்தது. மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரித்தனர்.          இது தொடர்பாக போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து  6 பின்னர் தீவிரவாத தடுப்பு படை போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டு மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.     இதில் தலைமுறைவாக இருந்த முகமது அப்துல் காதர் (23) என்பவர் சவுதி அரேபியாவில் இருப்பது தெரிய வந்தது. இதைடுத்து விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.        இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்துல் காதர் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தீவிரவாத தடுப்பு படை போலீஸ் சார் சென்று அவரை கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்

Similar News