நாகர்கோவில் கீழப்பெரு விளை பகுதியை சேர்ந்தவர் பள்ள விளை ராஜேஷ். அதிமுகவை சேர்ந்தவர். குமரி மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் ராஜ் என்பவர் மனைவி பெனினா என்பவருக்கு நாகர்கோவில் உள்ள ஒரு கல்லூரியில் நிரந்தர பேராசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் பணி வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், பணத்தையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ள விளை ராஜேஷ் மற்றும் அவரது மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழைத்து சென்று 2 மணி நேர விசாரணைக்கு பின் மனைவி விடுவிக்கப்பட்டார். ராஜேஷ் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பொழுது ராஜேஷ் நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூன்று நாட்கள் சிகிச்சை பின் நேற்று அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.