மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-02-27 13:58 GMT
அரியலூர், பிப்.27- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து மாவட்டத் தலைவர் சாகுல் ஹமீது  தலைமையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மாநில பொறுப்பு குழு உறுப்பினர் சபியுல்லா வரவேற்று பேசினார்.மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் தஸ்தகீர், மாநில பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பர்கத்,, முகமதுஆசிப் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மனிதநேய மக்கள் கட்சி தலைமை கழக பேச்சாளர் பிஸ்மில்லா கான், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், சி பி எம் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  மணிவேல், வெங்கடாஜலம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார், திமுக நகர செயலாளர் கருணாநிதி,,மதிமுக நிர்வாகி புகழேந்தி  உள்ளிட்டோர் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்ப் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் அனைத்து கட்சி சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News