நூலக விரிவாக்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்த எம்எல்ஏ

மீஞ்சூர் பேரூராட்சியில் புதிய நூலகவிரிவாக்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்;

Update: 2025-02-27 14:10 GMT
திருவள்ளூர் மீஞ்சூர் பேரூராட்சியில் புதிய நூலகவிரிவாக்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள நூலகத்தில் இட நெருக்கடியால் போதிய பொதுமக்கள் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமம் அடைந்து வந்ந நிலையில் புதிதாக கட்டிடம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது கூடுதல் விரிவாக்க கட்டிடம் கட்டுவதற்கு 22 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நூலக கட்டிடம் புதிதாக கட்டப்படுவதற்கான அடிக்கல் பூமி பூஜையை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்ஸாண்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் இதில் வார்டு உறுப்பினர் வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மற்றும் திமுக நகர செயலாளர் தமிழ் உதயன் மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News