முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற அதிமுக தொகுதி கழகத்தின் சார்பாகவும், தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாகவும், முன்னாள் முதல்வர்அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா. பொதுக்கூட்டம் தோக்கவாடி பகுதியில் திமுக திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளரும் அதிமுக மாநில இளைஞர்இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் மருத்துவர் பரமசிவம் மற்றும் முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கலந்துகொண்டு அதிமுகவின் 10 ஆண்டுகால சாதனையும், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டையும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளரும் அதிமுக மாநில இளம் பெண் இளைஞர் பாசறை செயலாளருமான மருத்துவர் பரமசிவம் பேசும் போது விகாரத்தில் பெண்கள் இடம் பிடிக்க வேண்டும் நகராட்சி கவுன்சிலராக ஊராட்சி மன்ற தலைவராக வரவேண்டும் என்பதற்காக கட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பச்சையினுக்கு பேனாவை பெண்களுக்கு கொடுத்து அழகு பார்த்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே தமிழ்நாட்டில் 68% அதனை திமுக 50 சதவீதமாக குறைக்கவும் வேண்டும் என முயற்சி செய்தனர் ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியலமைப்புச் சட்டத்தில் தனி ஒரு மனிதராக இருந்து ராஜ்யசபாவில் பிரதமரை சந்தித்து உச்சநீதிமன்றம் கூட தலையிட முடியாத அளவிற்கு 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் என பேசினார் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது இந்த திமுகவின் ஆட்சி இன்னும் 10 மாத காலம் தான் பத்து மாதத்திற்கு பிறகு நடைமுறைக்குரிய சட்டமன்றத் தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை திமுக காரர்கள் வந்து நம்மளை ஏமாற்றுவதற்காக என்னவெல்லாம் செய்தாலும் ஏமாறக்கூடாது மீண்டும் ஒருமுறை ஏமாந்து இருங்கள் என்றால் உங்களுடைய சொத்து உங்களது ஆக இருக்காது அந்த அளவுக்கு திமுக காரர்கள் அராஜகம் தலை உரித்து ஆடும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்காது தமிழகத்தில் போதைப்பொருட்கள் கஞ்சாவின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது இதனை கட்டுப்படுத்த மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே பொதுவாக இருக்கும் நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த அளவு 10 ஆண்டு காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் எத்தனை திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம் என பேசினார் முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு மாலை அணிவித்தும் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கினார் இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் சார்பு அணியினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.