தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்த அரசு பஸ் நடத்துநர் ராஜேஷ்கண்ணன். இவரை கொலை செய்த வழக்கில் வீரபாண்டி போலீசார் மலைச்சாமி என்பவரை 2021-ம் ஆண்டு கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (பிப்.27) மலைச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.