சென்னையில் ஒரு நாள் பட பாணியில் நடந்த திக் திக் சம்பவம்.
சென்னையில் ஒரு நாள் பட பாணியில் நடந்த திக் திக் சம்பவம். இருதயத்தை சுமந்து கொண்டு மதுரையிலிருந்து கோவைக்கு பறந்த ஆம்புலன்ஸ்.;
கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான பி எஸ் ஜி மருத்துவமனையில் இருதய கோளாறு காரணமாக 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.மேலும் அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்து வந்த நிலையில் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் 65 வயது மதக்கத்தக்க நபரின் இருதயமானது கோவையில் உள்ள நபருக்கு வழங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது.இந்த நிலையில் மதுரையில் இருந்து கோவைக்கு இருதயத்தை எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரையிலுருந்து தனியார் அம்புலன்ஸ் உதவியுடன் இருதயமானது கொண்டு வரப்பட்டது.அப்போது இருதயத்தை சுமந்து வந்த தனியார் அம்புலன்ஸிற்கு உதவி செய்யும் வகையில் பல்லடம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பல்லடம் நகரப் பகுதியில் இருந்து நகர் பகுதி முடியும் வரை எஸ்கார்ட் கொடுத்துச் சென்றனர். இந்த நிலையில் பல்லடம் நகர் பகுதியில் இருந்து நகர் பகுதி முடியும் வரை பல்லடம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் ஆம்புலன்ஸிற்க்கு உதவி செய்யும் வகையில் தங்களது உயிரைப் பனையம் வைத்து ஆம்புலன்ஸ்களை இயக்கிய வீடியோ ஒன்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடன் அமர்ந்திருந்த ஒருவர் எடுத்தது தற்பொழுது வைரலாகி உள்ளது.