ஒருங்கிணைந்த சமையல் கூட திட்டத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்
போராட்டம்;
ஒருங்கிணைந்த சமையல் கூடம் திட்டத்தைக் கண்டித்து, தஞ்சாவூா் கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் அலுவலகம் முன் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ஒருங்கிணைந்த சமையல் கூடம் திட்டத்தின் மூலம் உணவு தயாரித்து விடுதி மாணவா்களுக்கு வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு விடுதி மாணவா்களின் உணவு படித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். மாவட்டக் குழு உறுப்பினா் ரஞ்சித் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அா்ச்சுனன் கோரிக்கைகளை விளக்கினாா். இதில் விடுதி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.