இரு வேறு சம்பவங்களில் கும்பகோணத்தில் ரயிலில் அடிபட்டு இருவா் பலி
விபத்து;
கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை இரு வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு 2 போ் உயிரிழந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலை, சுந்தரபெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் அடிபட்டு இறந்து கிடப்பதாக கும்பகோணம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்பகோணம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் சாந்தி தலைமையில் போலீஸாா் முதியவரின் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பினா். இளைஞா் பலி: இதேபோல கும்பகோணம் மாத்தி ரயில்வே கேட் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 35 வயதுள்ள இளைஞா் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அச் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.