வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது*

வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது*;

Update: 2025-03-01 04:50 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவர் கைது வாணியம்பாடி நகர காவல்துறையினர் நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி இரு பிள்ளைகளுடன் நியூ டவுன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் அஸ்வினி வீட்டில் தனியாக இருக்கும் போது, திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அஸ்வினியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் உடனடியாக தகவல் அறிந்து வந்த கணவர் அருண் வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் காவல்துறையினர் நியூ டவுன் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர் அப்போது வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் குறித்து காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அந்நபர், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பது தெரிய வந்தது அதனை தொடர்ந்து, அவரை வாணியம்பாடி நகர காவல் துறையினர் கைது செய்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..

Similar News