ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள செங்கோட்டையன் காலனி பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோபி போலீசாருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.விசாரணையில் அவர்கள் செங்கோட்டையன் காலனி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (46), முருகன் (49), மனோகரன் (55), ஆறுமுகம்(45), மொடச்சூரை சேர்ந்த பி.சரவணன் (52), சி. சரவணன் (42), பாலாஜி (42), முருகேசன் (52), சின்னமொடச்சூரை சேர்ந்த சுரேஷ் (45) ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், சூதாட்ட பணம் ரூ. 6,770 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.