மது விற்பனை

Update: 2025-03-01 07:05 GMT
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, கோபி மற்றும் ஆசனூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சத்தியமங்கலம், புத்தனம்பாளையத்தை சேர்ந்த பாப்பண்ணன் (60), காஞ்சீபுரம் மாவட்டம், பல்லவன் மேடு பகுதியை சேர்ந்த ஜெயராமன் (55) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Similar News