கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு, க, ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தலைமை தாங்கி சிறப்பித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்;

Update: 2025-03-01 15:36 GMT
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு, க, ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, புதூர் ராமச்சந்திராபுரம், வருசநாடு, சிங்கராஜபுரம், பூசணியூத்து, நரியூத்து, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து சிறப்பித்து பேசினார். இதேபோல் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தலைமை தாங்கி சிறப்பித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார், இந்த நிகழ்ச்சியின் போது திமுக கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் மலைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபாகரன்,ஊராட்சி செயலாளர்கள் தென்னரசு, ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, உமாமகேஸ்வரி வேல்முருகன், பெருமாள், கருப்பையா, முன்னாள் மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பார்வதிஅன்பில் சுந்தரபாரதம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவக்குமார், வைகைசுப்பு, திமுக முக்கிய பிரமுகர்கள் கருணாநிதி, வெற்றிச்செல்வன், கர்ணன், முருகன் சோலைராஜா, வடிவேல், தொழில்நுட்ப பிரிவு பிரபு, மக்கள் நலப்பணியாளர் தமிழன், பால்பாண்டி, தங்கமலை, லோகந்துரை , ரவி, உள்ளிட்ட ஏராளமான திமுக கிளை கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News