கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர் நிகழ்ச்சி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப் பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பெரம்பலூர் புதிய பாதை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை முடிவு பெற்ற நபர்களிடம் போதை ஒரு ரகசியக் கொல்லி என்னும் தலைப்பில் விழிப்புணர்வு.;
பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமூகப் பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பெரம்பலூர் புதிய பாதை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை முடிவு பெற்ற நபர்களிடம் போதை ஒரு ரகசியக் கொல்லி என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அஜய், டாக்டர் பெரம்பலூர் மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு டாக்டர் வனிதா, பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை உதிரம் நாகராஜ், பெரம்பலூர் ஏகம் அறக்கட்டளை முருகானந்தம் மற்றும் கல்வியாளர் முனைவர் சந்திரமௌலி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் மையத்தில் சிகிச்சை முடிவு பெற்ற நபர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது