கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

கைது;

Update: 2025-03-02 13:01 GMT
தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் நேற்று கைலாசப்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அப்பகுதியைச் சேர்ந்த கமலா தேவி (44) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய மனோஜ் குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Similar News