மயிலம் அருகே மது பாட்டில் கடத்தியவர் கைது

291 மது பாட்டிலில் பறிமுதல்;

Update: 2025-03-02 13:52 GMT
மயிலம் போலீசார், பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது திண்டிவனம் நோக்கி சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மது பாட்டில் கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில் சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த செல்வா, 47; என்பவர், புதுச்சேரியில் இருந்து 291 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து செல்வாவை கைது செய்து, பைக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News