க.விலக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மார்ச்.1) குற்றத்தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றினை நிறுத்தி சோதனை செய்ததில் லாரியில் அரசின் அனுமதி இன்றி மூன்று யூனிட் செம்மண் இருந்தது தெரியவந்தது. மண் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.