சாலை பணியாளர்கள் எம்எல்ஏ ஈஸ்வரனிடம் மனு

சாலை பணியாளர்கள் எம்எல்ஏ ஈஸ்வரனிடம் மனு;

Update: 2025-03-03 05:30 GMT
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் சாலை பணியாளர்களின் நீண்ட நாள் வாழ்வாதாரக் கோரிக்கையான 07.09.02,முதல் 12.02.06 வரையிலான 41 மாதபணி நீக்க காலத்தை பணித் காலமாக அறிவிக்கப்படும் எனகடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதிகள் தெரிவிக்கப் பட்டது.ஆனாலும் இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை கருத்தியலான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு கணக்கில் கொள்ள வேண்டுமென தீர்ப்பு வழங்கியுள்ளது இதன் அடிப்படையில் அனைத்து அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சந்தித்து தங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் சட்டமன்றத்தில் தங்களது கோரிக்கையை பரிந்துரை செய்து பேச வேண்டும் எனக் கூறியும் கடிதம் கொடுக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்களை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைசாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர்விஜயகுமார் செ. விஜய குமார்,மாநிலத் துணைத் தலைவர் மா. கோபால கிருஷ்ணன்,மாநிலத் தணிக்கையாளர் க. மணிவண்ணன்,ஓய்வு பெற்ற மாநில துணைத்தலைவர் அ.பாலசுப்பிரமணியன்,மற்றும்நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர்.கடிதத்தைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ ஈஸ்வரன் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோருடன் பேசி ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.

Similar News