திருப்பத்தூரில் அதிகாரியை நிர்வாணப்படுத்தி மிரட்டி பணம் பறித்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் கைது*
திருப்பத்தூரில் அதிகாரியை நிர்வாணப்படுத்தி மிரட்டி பணம் பறித்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் கைது*;
திருப்பத்து மாவட்டம் திருப்பத்தூரில் அதிகாரியை நிர்வாணப்படுத்தி மிரட்டி பணம் பறித்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூவர் கைது* தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நிக்லஸ் மனைவி செல்வி என்கிற சூசையம்மாள் இவர் சன் லைட் ஹோம் கேர் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார் இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மூகண்டஹள்ளி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி நளினி வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் இவர் திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் அவரை பராமரிக்க சன் லைட் ஹோம் கேர் மூலம் நளினியை திருப்பத்தூருக்கு வேலைக்கு வர வைத்துள்ளார். அப்போது மகேந்திரனுக்கும் நளினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நளினி மகேந்திரன் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து செல்விக்கு அனுப்பி உள்ளார். அதன் பின்பு அந்த வீடியோவை செல்வி மகேந்திரனுக்கு அனுப்பி ஐந்து லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மகேந்திரன் 2 லட்சத்து 30ஆயிரம் ரூபாயை கொடுத்ததாக தெரிகிறது பின்னர் மீதி பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளார் இதனால் செல்வி தொலைபேசியில் அழைத்தால் அதனை மகேந்திரன் தவிர்த்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி அதன் வீடியோவை தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆம்பூர் பகுதியை விமல் ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியதன் காரணமாக விமல் ராஜ் மகேந்திரனுடைய வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார் இதனால் பயந்துபோன மகேந்திரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வி, நளினி மற்றும் விமல்ராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.