முல்லைப் பெரியாறு அணையில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை கண்காணிக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் மார்.7.ல் அணைப்பகுதியில் உள்ள மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்க்கசிவு காலரி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதனைத் தொடர்ந்து மாலை இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.