கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்.2) ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்பொழுது கம்பம் செக்கடி தெரு பகுதியில் அப்துல் சமது என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அப்துல் சமது மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.