பாரஸ்ட் ரோடு பகுதியில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு
திருட்டு;
தேனி பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசகன். இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக தனது வீட்டின் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுள்ளார். மார்ச்.1 அன்று வீடு திரும்பிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. திருட்டு குறித்து தேனி போலீசார் நேற்று (மார்ச்.2) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.