கஞ்சா வைத்திருந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது 

கிரைம்;

Update: 2025-03-03 15:52 GMT
தஞ்சை அருகே வல்லத்தில்  விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த ஜன. 26 ஆம் தேதி வல்லம் பிரிவு சாலை  பகுதியில்  கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (28) என்பவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அருண் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமிற்கு, வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் கணேஷ்குமார்,  ஆவணங்களை சமர்ப்பித்து வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம்  பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர்  பிரியங்கா பங்கஜம்  உத்தரவிட்டதின்படி அருணை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Similar News