மாணவர்கள் சேர்க்கையில்
பெரம்பலூர் வட்டம் செங்குணம் அண்ணா நகர் அங்கன்வாடியில் மழலையர் கல்வி பயின்று 5 வயது பூர்த்தியான குழந்தையின் பெற்றோர்கள்;
2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை 2025 மார்ச் -1 முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பெரம்பலூர் வட்டம் செங்குணம் அண்ணா நகர் அங்கன்வாடியில் மழலையர் கல்வி பயின்று 5 வயது பூர்த்தியான குழந்தையின் பெற்றோர்கள் இன்று செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வே.அமுதா தலைமையில் நடைப்பெற்ற மாணவர்கள் சேர்க்கையில் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர்கள் அருள்செல்வி, மைனாவதி, அங்கன்வாடி பணியாளர் லலிதா, ஒய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர் மரிய அந்தோனியம்மாள் மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உடனிருந்தனர்