தனியார் கல்லூரியில் கூலி வேலை செய்த நபர் மர்மமான முறையில் இறப்பு
இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்களும் விசிக கட்சியினரும் நாயம் கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக போராடுவோம்.;
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ்ச்செருவாய் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை த/பெ வெங்கடாசலம், என்பவர் பணிபுரிந்து வந்திருக்கிறார் அங்கு பணியின் போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக சொல்லி அவரது உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இறந்து போன தங்கதுரை என்பவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அவருக்கு ஊனமுற்ற மனைவிஅஞ்சலை, மகன்கள் ஆனந்தகுமார்,அரவிந்த, மகள் வர்ஷிகா,ஆகியோர் உள்ளனர். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் எந்த பதிலும் தெரிவிக்கவும் கல்லூரியில் பணி செய்தவர் இறந்து விட்டார் என மனிதாபிமானமே இல்லாமல் இருக்கும் நிர்வாகத்தின் மீது காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டு மென பெரம்பலூர் மேற்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடலூர் மாவட்ட விசிகவினரும் பாதிக்கப்பட்டவரின் சார்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது இறந்த குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் எஃப் ஐ ஆர் போடாமலும் அலட்சியம் காட்டி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். பெரம்பலூர்,கடலூர்,மாவட்ட கட்சி நிர்வாகிகள் க, திருவள்ளுவன் ம.க.ச.இரத்தினவேல் மாவட்டச்செயலாளர் பெரம்பலூர் மேற்கு மாவட்டம், நா.கிருஷ்ணகுமார், பொன் பாவாணன், எ.வெற்றியழகன், மா.இடிமுழக்கம் M.P.மனோகரன் இரா. பிச்சப்பிள்ளை பெ.முரசொலி சு.பாலன் அ.பிச்சைப்பிள்ளை, விசுவக்குடி செல்வராஜ் பாலசுப்பிரமணியம் , மருவத்தூர் கதிரவன், ஆ.இ.அழகுமுத்து கடலூர் சே.அம்பேத்கர் சாய் பிரசாத் முத்துக்குமார் முல்லைநாதன் முத்தழகன் சின்னத்துரை சுரேஷ்குமார் கோகுல் கலைவாணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தனர்