தேவதானப்பட்டி அருகே அனுமதி இன்றி கல்குவாரி நடத்திய எட்டு பேர் வழக்கு
வழக்கு;
தேவதானப்பட்டி அருகே அ.வாடிப்பட்டியிலிருந்து விராலிபட்டி செல்லும் சாலையில் உள்ள பட்டா நிலத்தில் அனுமதியின்றி கல்குவாரி செயல்படுவதாக வந்த புகாரினை தொடர்ந்து நேற்று (மார்.3) வருவாய் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்கு அரசு அனுமதியில்லாமல் கற்களை வெடிவைத்து உடைத்து கனிமவள கொள்ளையில் ஈடுபடுவது தெரிந்தது. ஜெயமங்கலம் போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.