இலவச திருமண விழாவை அமைச்சர் நடத்தி வைத்தார்

ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் இலவச திருமண விழாவை உணவுத்துறை அமைச்சர் நடத்தி வைத்தார்.;

Update: 2025-03-04 06:19 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய 5 இணையர்களுக்கு இலவச திருமணம் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களின் சார்பில் 20 மண்டலங்கள் மற்றும் 30 ஏழை எளிய இணையர்களுக்கு நான்கு கிராம் தங்கத்துடன் மாங்கல்யம் மற்றும் சுமார் - 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சீதனமாக சீர்வரிசைகளுடன் வழங்கி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. இதில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பழனி அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் , அன்னபூரணி, தனசேகரன், இணை ஆணையர் வெங்கடேசன், உதவிஆணையர் லட்சுமி, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் லட்சுமி நாராயணன், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவபாக்கிய ராமசாமி, மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News