குமரியில் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நல உதவிகள் 

நாகர்கோவில்;

Update: 2025-03-04 06:33 GMT
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.    இந்த கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 396 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.          தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.32,850 மதிப்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், ரூ.1.06 இலட்சம் மதிப்பில்                    1 மாற்றுத்திறனாளிக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, ரூ.19,000 மதிப்பில் 7 மாற்றுத்தினாளிகளுக்கு செயற்கை கால்களும், 7 மாற்றுத்தினாளிகளுக்கு மூடநீக்கு உபகரணங்கள்   என மொத்தம் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நடைபெற்ற கூட்டத்தில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News