சங்கரன்கோவில் அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்தது
வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்தது;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மாங்குடி செவல்பட்டி தெருவில் ஆதித்தனார் பள்ளி கீழ்புறம் உள்ள வீட்டில் பிரின்ஸ் சார்லஸ்- ராஜசெல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வீட்டிற்குள் இருந்த ஃப்ரிட்ஜில் தீப்பிடித்து எரிவதை கண்ட பிரின்ஸ் சார்லஸ் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை எழுப்பி வெளியே போகச் சொல்லி பின்னர் சமையல் கேஸ் சிலிண்டரில் தீ பரவி விடக்கூடாது என அதனை வெளியே பத்திரமாக எடுத்த பின்னர் பலத்த சத்தத்துடன் ஃப்ரிட்ஜ் வெடித்துள்ளது. இதனை எடுத்து அங்குள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் பொருள்கள் மற்றும் உடைமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானதால் அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.