நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் வரத்து சரிவு
நல்லம்பள்ளி வாரச்சந்தியில் ஆடுகள் வரத்து சரிவு, 30 லட்சத்திற்கு விற்பனை;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் ஆடுகள் விற்பனைக்காக பிரத்யோகமாக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் மார்ச் 04 இன்று காலை கூடிய வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்யவும் வாங்குவதற்காகவும் வந்திருந்தனர் ஆடுகள் வரத்து இன்று சரிந்து காணப்பட்டதால் விலை அதிகரித்து காணப்பட்டது இன்று சிறிய அளவில ஆடுகள் 3, 500 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 24,000 ரூபாய் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் 30 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது