கண்டமனூரை சேர்ந்தவர் முருகன் (67). இவர் கோட்டை கருப்பசாமி கோயிலில் தொழுவத்தில் உள்ள மாட்டை பராமரித்து வந்தார். இந்நிலையில் பிப்.25 அன்று முருகன் மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்றபோது மாடு அவரை முட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். கண்டமனூர் போலீசார் நேற்று (மார்.3) வழக்கு பதிவு செய்து விசாரணை.