ராமநாதபுரம் லஞ்சம் வாங்கிய குற்றத்தில் இருவர் கைது
தரகட்டுப்பாடு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.5,60,000/-ம் பறிமுதல்;
ராமநாதபுரம் உதவி கோட்ட பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக கிடைத்த ரசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.5,60,000/-ம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேற்படி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் தொடர்ந்து தீவிர சோதனை சம்பந்தப்பட்ட இரண்டு பேர் கைது செய்துள்ளனர் .