அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம் 

கன்னியாகுமரி;

Update: 2025-03-04 09:09 GMT
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு கூட்டம்   ஒன்றிய தலைவர்  செல்வன் தலைமையில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் வழக்கறிஞர் எஸ்.பி. அசோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொட்டாரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் தேர்வு பயத்தை பயன்படுத்தி  மதமாற்ற வாசகங்களை பள்ளி வாட்ஸாப் குழுவில் பகிர்ந்து   மத நல்லிணக்கத்திற்கும், அரசு வழிகாட்டி நெறிமுறைகளுக்கும் எதிராக செயல்பட்ட தலைமை ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும், பெற்றோர் மற்றும் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப் பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொது செயலாளர்  எம்.ஆர். சிவா, பொன்னையா, பொன்பாண்டியன், வேலாயுதம், நாதன், ராஜன், அஜய்தேவ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News