சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்

அதிமுக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்;

Update: 2025-03-04 09:15 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் மண்டபத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அதிமுக மாவட்ட செயலாளர் குருசேவ் தலைமையில் அப்பகுதியில் உள்ள 100க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக தென்காசி மாவட்ட மகளிர் அணி பொருளாளர் நிர்மலா தேவி, திருநெல்வேலி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிவா ஆனந்த். மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் தனபால். மாவட்டத் துணைச் செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் சகுந்தலா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவர் மாரிச்செல்வம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News