சாலையோர தடுப்புகள் சேதம் அச்சத்தில் பகுதிவாசிகள்

சேதமடைந்த சாலையோர தடுப்புகளை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை;

Update: 2025-03-04 09:16 GMT
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கம் கிராமத்தில், வெங்கச்சேரி - திருமுக்கூடல் சாலை செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலையோரத்தின் இருபுறமும் பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, சில ஆண்டுக்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது, தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமலும், கனரக வாகனங்கள் மோதி சேதமடைந்தும் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும், வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். தடுப்புகளை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சேதமடைந்த சாலையோர தடுப்புகளை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News