பரப்புவிளையில் கல்லறை தோட்டம் அமைக்கும் பணி துவக்கம்

கன்னியாகுமரி;

Update: 2025-03-04 09:24 GMT
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பரப்பு விளை கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டம்  செடி, கொடிகள் நிறைந்து காணப்பட்டது. மேலும் சுற்று சுவர் இல்லாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளித்தது.      இதனையடுத்து அஞ்சுகிராமம் பேரூராட்சி  தலைவர் ஜானகி இளங்கோ தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு    பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து  சுற்று சுவர் கட்டும் பணியை செயல் அலுவலர் உஷா கிரேஸி தலைமையில், 1-வது வார்டு கவுன்சிலர் தனம் செல்வக்குமார் முன்னிலையில் அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ்  பணியினை தொடங்கிவைத்தார்.        உடன் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் கதிர்வேல், வரி வசூலர் ராணி,  திமுக பிரமுகர் செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News